/

முதல்வர் இன்று அல்லது நாளை வீடு திரும்புவார்

முதல்வர் இன்று அல்லது நாளை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:48 am

DIN

சென்னை: முதல்வர் இன்று அல்லது நாளை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Story image

காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் சில நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

மருத்துவ பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலம் தேறி வருவதாகவும், தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார்.

அப்போது, சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் துவக்கவிழாவில் அவசியம் பங்கேற்க வேண்டும் என்று மோடிக்கு அழைப்பு விடுத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

நலம் விசாரித்த பிரதமர் மோடியிடம் தான் நன்கு குணமடைந்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.