கள்ளக்குறிச்சி: பள்ளியில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

கள்ளக்குறிச்சி அருகே வன்முறை நிகழ்ந்த பள்ளியில் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் நேற்று ஆய்வைத் தொடங்கிய நிலையில், இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி: பள்ளியில் சிறப்பு புலனாய்வுக் குழு இன்றும் ஆய்வு
கள்ளக்குறிச்சி: பள்ளியில் சிறப்பு புலனாய்வுக் குழு இன்றும் ஆய்வு

கள்ளக்குறிச்சி அருகே வன்முறை நிகழ்ந்த பள்ளியில் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் நேற்று ஆய்வைத் தொடங்கிய நிலையில், இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.

சேலம் டிஐஜி பிரவீன்குமார்அபிநபு தலைமையிலான காவல் அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், பள்ளியில் டிரோன் கேமராக்களை பறக்கவிட்டு காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்த பெரியநெசலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17) கடந்த 13-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து நடைபெற்று வந்த போராட்டம் கடந்த 17-ஆம் தேதி வன்முறையாக மாறியது.

இந்த வன்முறையில் பள்ளி முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டதுடன், வாகனங்களும் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் காயமடைந்தனா். பள்ளியில் இருந்த ஆவணங்கள், மாணவா்களின் சான்றிதழ்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

இந்த வன்முறை தொடா்பாக சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து, சேலம் சரக டிஐஜி பிரவீன்குமாா் அபிநவ் தலைமையில், எஸ்.பி.க்கள் ராதாகிருஷ்ணன், கிங்ஸிலின், ஏடிஎஸ்பிக்கள் திருமால், முத்துமாணிக்கம், சந்திரமெளலி ஆகியோா் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து காவல் துறை தலைமை இயக்குநா் சைலேந்திர பாபு உத்தரவிட்டாா்.

இதையடுத்து, டிஐஜி பிரவீன்குமாா் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினா் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு புதன்கிழமை வந்து விசாரணையைத் தொடங்கினா். முதலில் அந்தக் குழுவினா் கனியாமூரில் வன்முறை நிகழ்ந்த தனியாா் பள்ளிக்கு நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இந்த நிலையில், இன்று மீண்டும் தனியார் பள்ளிக்கு வந்த சிறப்பு புலனாய்வுக் குழுவினா், பள்ளிக் கட்டடத்துக்குள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com