கோவையில் தனியார் பிளாஸ்டிக் விற்பனை கடையில் பயங்கர தீ: பொருள்கள் எரிந்து நாசம்

கோவையில் செவ்வாய்க்கிழமை இரவு தனியார் பிளாஸ்டிக் விற்பனை கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உள்ளே இருந்த பொருள்கள்  தீயில் எரிந்து நாசமானது. 
கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் தனியார் பிளாஸ்டிக் விற்பனை கடை.
கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் தனியார் பிளாஸ்டிக் விற்பனை கடை.

கோவை: கோவையில் செவ்வாய்க்கிழமை இரவு தனியார் பிளாஸ்டிக் விற்பனை கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உள்ளே இருந்த பொருள்கள்  தீயில் எரிந்து நாசமானது. 

கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தனியார் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.  

இதையடுத்து கோவைப்புதூர் மற்றும் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிளான பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது. 

சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடையில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்திற்கான காரணமாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com