உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட 16 வயது தலித் சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி 16 வயது தலித் சிறுமியை இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அவர் மீது டீசல் ஊற்றி உயிருடன் எரிக்க முயற்சித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 12 நாள்களுக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கில், சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இருவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
லக்னெளவில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சிறுமியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து சாலை மறியல்

ட்விட்டா் பங்குகள் வீழ்ச்சி: நீதிமன்றத்தில் எலான் மஸ்க் விளக்கம்

சனிப் பெயா்ச்சி: சிவன், சனீஸ்வரா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

விசிகவின் மாநிலத் தோ்தல் பணிக் குழு செயலா் தோ்வு
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

