கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

குடிமகன்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த தமிழக அரசு அனுமதி!

பார் மற்றும் நட்சத்திர விடுதிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதி தற்போது கூடுதலாக திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :24 ஏப்ரல் 2023, 4:06 am

DIN


பார் மற்றும் நட்சத்திர விடுதிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதி தற்போது கூடுதலாக திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மது ஆயத்தீர்வை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக் கொள்ளாம் என தமிழக அரசு இதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Story image

தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் பணீந்தர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மது அருந்த அனுமதிக்கும் வகையில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை அருந்தலாம். இதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியரும், மதுவிலக்கு துணை ஆணையர்கள் வழங்குவார்கள் என தமிழ்நாடு அரசு இதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பி.எல் 2எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பரிமாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து டாஸ்மாக்கை தவிர, பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் வழங்கப்பட்டு வந்த மதுபானங்கள் இனி திருமணங்கள் மற்றும் விளையாட்டு கூடங்களிலும் பயன்படுத்த ஏதுவாக இருக்கிறது. 

Story image

இந்த அறிவிப்பு தொடர்பான கட்டுப்பாடுகளில் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினர் தேவைப்படும் பட்சத்தில் கண்காணிக்கலாம் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சிறப்பு அனுமதிக்கு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மது அருந்துவது என்பது பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி ஒரு நாள் நடத்தும் விழாவாக இருந்தாலும் அரசிடம் அனுமதி பெற்று சிறப்பு கட்டணம் செலுத்தி மது விருந்து அளிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.