குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றான, சென்னை, கிண்டி பன்நோக்கு அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவுக்குத் தயாராகி உள்ளது. மேலும், திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 

திமுகவின் முக்கிய திட்டங்களாகப் பார்க்கப்படும் இவற்றின் திறப்பு விழாவிற்கு  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்கத் திட்டமிட்டிருந்தது. 

அதன்படி, இன்று காலை தில்லி புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com