மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மனதின் குரல் நிகழ்ச்சி 23 கோடி மக்களால் ரசிக்கப்படுகிறது: அண்ணாமலை

மனதின் குரல் நிகழ்ச்சி 23 கோடி மக்களால் ரசிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப் படம்.
Updated On :29 ஏப்ரல் 2023, 3:54 pm

DIN

மனதின் குரல் நிகழ்ச்சி 23 கோடி மக்களால் ரசிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒவ்வொரு மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையும், எனது அருமை நாட்டு மக்களே என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தன் உரையைத் தொடங்கும் மனதின் குரல் நிகழ்ச்சி 23 கோடி மக்களால் ரசிக்கப்படுகிறது.
 காணொளி தொடர்புகள் கன்ணிமைக்கும் நேரத்தில் கிடைக்கும் இக்காலக் கூட்டத்தில், வாணொலி மூலம் மக்களை வசீகரித்து, வாகை சூடிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நூறாவது மன் கி பாத் நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கிறது. 100வது முறையாக மனதின் குரல் ஆக தமிழில் மலர இருக்கிறது. 
 ஒரே நேரத்தில், நாடு முழுவதும் பல கோடி மக்களால் பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சியை, தமிழக பாஜக சார்பில் ஒவ்வொரு மாவட்டந்தோறும், ஒவ்வொரு மண்டல் தோறும், கிளை அளவில் அனைவரும் காணும் வகையில், மக்களின் மனம் கவர்ந்த மன் கி பாத் நிகழ்ச்சியின் ஒலி, ஒளிபரப்புகள், பாஜகவின் கார்யகர்த்தர்களால் விரிவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 இதுவரை உலகில் எந்த பிரதமரும், எந்த நாட்டின் தலைவரும், வானொலியின் வாயிலாக மக்களை சந்தித்ததில்லை. இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க அதிபர் 13 முறை வானொலியில் பேசியதே, இதுவரை சாதனையாக கருதப்பட்டது. புதிய சாதனையாக 99 முறை மக்களிடம் வானொலியில் உரையாற்றிய நம் பாரத பிரதமர், நாளை 100வது முறையாக மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்ற இருக்கிறார். 
 சாமானியர்களின் சாதனையை, மக்களின் கருத்தை, விருப்பத்தை, மக்களுக்காக வெளிப்படுத்தும் மகத்தான நிகழ்ச்சி மன் கி பாத். நூறாவது மன் கி பாத் நிகழ்ச்சியில் நம் பாரத பிரதமர் நாட்டு மக்களுக்கு விடுக்க இருக்கும் செய்தியை கேட்பதற்காக, நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.