பொற்பனைக்கோட்டை அகழாய்வில் வட்டவடிவ சுவர்!

புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டையில் நடந்து வரும் அகழாய்வில் வட்டவடிவ சுவரின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டையில் நடந்து வரும் அகழாய்வில் வட்டவடிவ சுவரின் ஒரு பகுதி வெளிப்பட்டுள்ளது.

மேலும், பொற்பனைக்கோட்டையில் நடந்துவரும் அகழாய்வில் பானை ஓட்டின் வட்டசில், தங்க அணிகலன்கள் உள்பட 333 தொல்பொருள்கள் முதற்கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் கடந்த மே 20ஆம் தேதி தமிழ்நாடு தொல்லியல் துறை சாா்பில் அகழாய்வுப் பணி தொடங்கிய சில நாள்களிலேயே ஏ1 என்னும் குழியில் 19 செமீ ஆழத்திற்குள் ஒரு செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டது.

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் 3.11 ஏக்கா் பரப்பளவு கொண்ட அரண்மனைத் திடல் வாழ்விடப் பகுதியில் இதுவரை 5 மீட்டா் நீள அகலத்தில் 8 குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com