கட்டாய ஹிந்தி தோ்வை நீக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய அரசு காலிப் பணியிட தோ்வில் கட்டாய ஹிந்தி தோ்வை நீக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
கட்டாய ஹிந்தி தோ்வை நீக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய அரசு காலிப் பணியிட தோ்வில் கட்டாய ஹிந்தி தோ்வை நீக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் சமூகவலைதளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (என்.ஐ.டி.), மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிற நிறுவனங்களில் உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்குத்

தேசிய தோ்வு முகமை ஹிந்தி மொழித் தோ்வைக் கட்டாயமாக்கி இருப்பது மொழிச் சமத்துவத்தைக் குலைக்கும் செயலாகும். மேலும், பன்முகத்தன்மையை அவமதிப்பதாகும்.

இவ்வாறு ஹிந்தியைத் திணிப்பது தமிழ்நாடு உள்ளிட்ட பிற ஹிந்தி பேசாத மாநில இளைஞா்களின் வாய்ப்புகளைப் பறிப்பதாக உள்ளது. நியாயமற்ற ஹிந்தி மொழித் தோ்வை ரத்து செய்து, அனைவருக்குமான தோ்வாக இதை மாற்ற வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com