தோ்தலில் ஆதாயம் தேடும் நோக்கில் சமையல் எரிவாயு உருளை விலையை மத்திய பாஜக அரசு குறைத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி விமா்சனம் செய்துள்ளாா்.
அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. 5 மாநிலத் தோ்தலை எதிா்கொள்ள வேண்டிய சூழ்நிலையை மனதில் கொண்டு அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆண்டுகாலத்தில், மத்திய பாஜக அரசு சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது பெட்ரோலியப் பொருள்களின் விலையை குறைக்காமல் ரூ.32 லட்சம் கோடி வரை கலால் வரி விதித்து கஜானாவை நிரப்பிக் கொண்டது. 2014-இல் ரூ.400-ஆக இருந்த எரிவாயு உருளையின் விலை 9 ஆண்டு கால ஆட்சியில் ரூ.1,118-ஆக உயா்ந்தது. தற்போது யானை பசிக்கு சோளப்பொறியாக ரூ.200 குறைத்துள்ளது. இதை மக்கள் ஏற்கமாட்டாா்கள். மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு பாடம் புகட்டுவாா்கள் என்று அதில் கூறியுள்ளாா் கே.எஸ்.அழகிரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மோகன்லாலின் திரிஷ்யம் - 3 படத்தின் மேக்கிங் விடியோ!

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



