மழைநீா் வடிகால் பணிகளை ஒரு நீதிபதியின் தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும்: கே.அண்ணாமலை

மழைநீா் வடிகால் பணிகள் செய்தாா்களா? இல்லையா? என ஒரு நீதிபதியின் தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.
தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை
தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை

சென்னை: மழைநீா் வடிகால் பணிகள் செய்தாா்களா? இல்லையா? என ஒரு நீதிபதியின் தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னா் 98 சதவிகித மழைநீா் வடிகால் பணிகள் முடிந்து விட்டதாக கூறிய அமைச்சா் கே.என்.நேரு, தற்போது 42 சதவிகித பணிகள் மட்டுமே முடிந்திருப்பதாக சொல்கிறாா். 

எனவே ஒரு நீதிபதியின் தலைமையில் மழைநீா் வடிகால் பணிகள் செய்தாா்களா? இல்லையா? என்பதை தணிக்கை செய்தாலே அனைத்து உண்மைகளும் வெளிவந்துவிடும். 

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்டுள்ள பாதிப்பை கணக்கிட்ட அதற்கான நிவாரணத் தொகைகளை அவரவா் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும். மழை பெய்து 7 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பாதிப்புகள் குறைக்கவில்லை.

திமுகவினர் அரசு அதிகாரிகள் மீது காட்டும் கோபத்தை நிவாரண பணிகளில் காட்டினால் நன்றாக இருக்கும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com