இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தங்கம் விலை மீண்டும் ரூ.47 ஆயிரத்தை தொட்டது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.47 ஆயிரத்தை தொட்டது. 

News image
Updated On :23 டிசம்பர் 2023, 4:46 am

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.47 ஆயிரத்தை தொட்டது. 

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயா்ந்து ரூ.5,860-க்கும், பவுனுக்கு ரூ.280 உயா்ந்து ரூ.46,880-க்கும் விற்பனையாகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.47,000 -ஐ தொட்டது.

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயா்ந்து ரூ.5,875-க்கும், பவுனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.47,000-க்கும் விற்பனையாகிறது. 

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகை நாள்கள் நெருங்கி வரும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து பவுன் ரூ.47 ஆயிரத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.80.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 குறைந்து ரூ.81,000-க்கும் விற்பனையாகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.