செங்கல்பட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னையில் இருந்து அதிகளவிலான வாகனங்கள் வெளியேறுவதால் செங்கல்பட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் இருந்து அதிகளவிலான வாகனங்கள் வெளியேறுவதால் செங்கல்பட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு மக்கள் திரும்பி வருகின்றனர்.

சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேற்று மாலையில் இருந்தே ரயில், பேருந்து மற்றும் சொந்த வாகனங்களில் ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் இருந்து வெளியேறும் வாகனங்களால் செங்கல்பட்டு பழவேளி, பரனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சுமார் 5 கி.மீ.க்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் நெரிசலை தவிர்க்க பாலாற்று பாலம் வழியாக சென்னையில் இருந்து வரும் வாகனங்களை காவல்துறையினர் திருப்பிவிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com