/

கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றம்!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதால், அவரைக் காண ஏராளமான மக்கள் குவிந்துவருவதையடுத்து கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. 

News image
Updated On :28 டிசம்பர் 2023, 9:49 am

DIN

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதால், அவரைக் காண ஏராளமான மக்கள் குவிந்துவருவதையடுத்து கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. 

விஜயகாந்த்திற்கு கரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்த விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர், விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்திற்குக் கொண்டுவருவதற்காக காலை 10.30 மணிக்கு விருகம்பாக்கத்தில் புறப்பட்ட ஊர்வலம் பிற்பகல் 1.25 மணிக்கு கோயம்பேடு வந்தடைந்தது.  

கோயம்பேடு மேம்பாலம், கட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை, கோயம்பேடு மேம்பாலம் அருகே அதிகளவு வாகன நெருக்கடியால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் பாடி மேம்பாலம், திருவீதி அம்மன் சர்வீஸ் ரோடு, சாந்திகாலனி வழியாகச் செல்ல போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.