தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

விஜயகாந்த்தின் உடல் தீவுத்திடலில் வைக்கப்படும்: தேமுதிக

சென்னை தீவுத்தீடலில்  விஜயகாந்த்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக  வைக்கப்படும் என்று தேமுதிக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:00 pm

DIN

தீவுத்தீடலில்  விஜயகாந்த்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக  வைக்கப்படும் என்று தேமுதிக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை  அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் விஜயகாந்த்தின் உடல் நாளை (டிச. 29) காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை 4.45 மணிக்கு விஜயகாந்த்தின் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

விஜயகாந்த் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.  அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு நடிகர்கள், அரசியல் கட்சியினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.