புதுமைப்பெண் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று(புதன்கிழமை) தொடக்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி தொடக்கி வைத்தார்.
இதன் மூலமாக தற்போது உயர்கல்வி பயிலும் 1.13 லட்சம் மாணவியர் இந்தத் திட்டத்தில் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுமைப்பெண் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.
இதன்பின்னர் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த புதுமைப்பெண் திட்டத்தினால் உயர்கல்வி சேர்க்கை 27% ஆக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சோனம் வாங்சுக் உடன் இணைந்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாளை உண்ணாவிரதம்!

தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்! லஞ்சம் வாங்கியதாக விடியோ வெளியான விவகாரம்!

அமிர்த் பாரத் திட்டத்தில் சென்னை பூங்கா ரயில் நிலையம்! ஜூலை 17-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்!






