மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோடு இடைத்தேர்தல் நியாயமாக நடத்தப்படும்: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நியாயமாக நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

News image
Updated On :16 பிப்ரவரி 2023, 7:58 am

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நியாயமாக நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில், போட்டியிடும் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாகவும், வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்த தெரிவித்ததாவது:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தப்படும். கள்ள ஓட்டு போடுவதை தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இரட்டைப் பதிவு கொண்ட வாக்காளர்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 409 மத்திய காவல் படை வீரர்களும், பறக்கும் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தங்களால் செய்ய முடிந்ததை சிறப்பாக செய்வதாக தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.