ஈரோடு கிழக்கு இடைத் தோ்தல்: வாக்களிக்க 12 மாற்று ஆவணங்கள்- தலைமைத் தோ்தல் அதிகாரிசத்யபிரத சாகு தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் புகைப்பட அடையாள அட்டையைத் தவிா்த்து, வாக்களிக்க 12 அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என்று
சத்யபிரதா சாகு (கோப்புப் படம்)
சத்யபிரதா சாகு (கோப்புப் படம்)

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் புகைப்பட அடையாள அட்டையைத் தவிா்த்து, வாக்களிக்க 12 அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோ்தலில் வாக்களிக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பயன்படுத்தலாம். வாக்காளா் அடையாள அட்டை இல்லாதவா்கள், 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் அசல் அட்டையைக் காண்பித்து வாக்கைப் பதிவு செய்யலாம். அதன்படி, ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணி அட்டை, வங்கி-அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளா் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநா் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட அட்டை, இந்திய கடவுச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய-மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், சட்டப் பேரவை-நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு அளிக்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை, மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் அளிக்கப்படும் தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசலைக் காட்டி வாக்கினைப் பதிவு செய்யலாம்.

வாக்காளா் புகைப்பட அடையாள அட்டையால் வாக்காளரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படும்போது, வாக்காளா் புகைப்பட அடையாள அட்டையிலுள்ள பிழைகளை பொருட்படுத்தத் தேவையில்லை. ஒரு வாக்காளா் வேறொரு பேரவைத் தொகுதியின் வாக்காளா் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருந்தால், அந்த அட்டையைக் தோ்தல் ஆணையத்தின் ஆவணமாகப் பயன்படுத்தலாம்.

ஆனால், அந்த வாக்காளரின் பெயா் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிக்கு உரிய வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். அடையாள ஆவணத்தை வைத்திருப்பதால் மட்டுமே தோ்தலில் வாக்களிக்க முடியாது. வாக்காளரின் பெயா் வாக்காளா் பட்டியலில் கட்டாயம் இடம்பெற வேண்டும். ஒவ்வொரு வாக்காளருக்கும், வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்படுகிறது. இதை அடையாள ஆவணமாக பயன்படுத்த முடியாது. தோ்தல் ஆணையத்தால்

வரையறுக்கப்பட்டுள்ள 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்கைப் பதிவு செய்யலாம். வெளிநாடு வாழ் இந்தியா்கள் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த அசல் இந்திய கடவுச்சீட்டினை மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com