/

பாஜகவை கண்டித்து பிப். 28ல் விசிக ஆர்ப்பாட்டம்!

பாஜகவுக்கு எதிராக வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

News image
திருமாவளவன்
Updated On :23 பிப்ரவரி 2023, 7:19 am

DIN

பாஜகவுக்கு எதிராக வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

அதன்படி, தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு முயலும் சனாதன சக்திகளைக் கண்டித்து சென்னையில் வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இதுகுறித்து, 'தமிழ்நாட்டில் வன்முறைகளைத் தூண்டிச் சட்டம் - ஒழுங்கை சீர்குலைப்பதே சனாதன சக்திகளின் சதி நோக்கம்! தரங்கெட்ட பேச்சுகள், ஆபாசமான விமர்சனங்கள், வீம்புக்கு வம்பிழுக்கும் வீணான அவதூறுகள் மூலம் சமூக அமைதியைக் கெடுப்பதே பாஜகவின் செயல்திட்டம்!

மக்கள் விரோத ஃபாசிச பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகளைக் கண்டித்து பிப்ரவரி-28 சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம். விசிக தலைமைச் நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம்!' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.