பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மதுரை கூடலழகர் கோயில் ஆக்கிரமிப்பு வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மதுரை கூடல் அழகர் கோயில் குளத்தை சுற்றி, ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்றக்கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற  மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :2 பிப்ரவரி 2024, 12:07 am IST

மதுரை கூடல் அழகர் கோயில் குளத்தை சுற்றி, ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்றக்கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற  மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த சுசீந்திரன் என்பவர்  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில் மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில் மதுரையின் சிறப்பு. இந்த கோயில் வைணவ கோவில்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. கோயிலின் குளம் புனிதமாக கருதப்படும் சூழலில், கோயிலை சுற்றி அரசியல் பலம் கொண்ட சிலர் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை சட்டவிரோதமாக அமைத்துள்ளனர்.

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தெப்பத் திருவிழாவின் போது இந்த கடைகளால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.  ஆகவே மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவில் குளத்தை சுற்றி, ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு, வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலின் செயல் அலுவலர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.