உதயநிதியின் செயல்பாடுகளை நாள்தோறும் கண்காணித்து வருவதாக திமுக இளைஞரணி செயலி தொடக்க விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி செயலியையும் திராவிட மாடல் பயிற்சி பாசறையையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், திமுகவில் எத்தனை அணிகள் இருந்தாலும் இளைஞர் அணிதான் முதன்மையாக உள்ளது. சமூக ஊடகங்களில் நல்ல செய்திகளும் வருகின்றன. விமர்சனங்களும் வருகின்றன. அதனை பொருட்படுத்தாது பணி செய்ய வேண்டும்.
நீட் தேர்வு எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் திமுக இளைஞரணி சிறப்பாக செயல்பட்டுள்ளது.
உதயநிதியின் செயல்பாடுகளை நாள்தோறும் கண்காணித்து வருகிறேன். அவரைப்பற்றி நல்ல செய்திகளும் வருகின்றன. விமர்சனங்களும் எழுகின்றன.
நீர் நிலைகள் பாதுகாப்பு, தூர்வாருவது உள்ளிட்ட அரசு பணிகளில் திமுக சார்பாக உதயநிதி பங்கெடுத்தார்.
ஊராட்சி தேர்தலின்போது உதயநிதி சுற்றுப்பயணம் செய்து பெரிய எழுச்சியை ஏற்படுத்தினார். உதயநிதிக்கு துணை நிற்பவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உணவகங்கள், பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

பாஜக பிரமுகா் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

