ஜன. 23ல் ஓபிஎஸ் தரப்பு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை?
சென்னையில் வருகிற ஜனவரி 23 ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பு மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.


சென்னையில் வருகிற ஜனவரி 23 ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பு மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈவெரா உயிரிழந்ததையடுத்து, இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய தோ்தல் ஆணையம் புதன்கிழமை ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தோ்தலை அறிவித்தது. அன்றைய தினம் முதல் தேர்தல் விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளன.
இத்தொகுதியில், ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப் பதிவு, மாா்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் வருகிற ஜனவரி 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனிடையே இன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை அதிமுக நிர்வாகிகள் குழு இன்று(வியாழக்கிழமை) சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஈரோடு இடைத்தேர்தல்: ஜி.கே.வாசனை இன்று சந்திக்கிறது அதிமுக குழு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...