டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ஈரோடு கிழக்கில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்:  தினேஷ் குண்டுராவ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்

Published On :

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் தான் போட்டியிடவில்லை என்றும், இளைய மகன் போட்டியிட வாய்ப்பு தருமாறு கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினாா்.

இந்த நிலையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சத்தியமூர்த்தி பவனில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்ததாவது:

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஓரிரு நாள்களில் தேர்வு செய்யப்பட்டு விடுவார். இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.