பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்தவர்கள் சான்றிதழ் பெற அழைப்பு

தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் சான்றிதழ் பெற விண்ணப்பிக்குமாறு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image

தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்தவர்கள் சான்றிதழ் பெற அழைப்பு

Updated On :27 ஜனவரி 2023, 10:54 am

சென்னை: தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்குமாறு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், 
தமிழக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை  சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையின்படி, 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி / என்ஏசி (NTC/ NAC) பெற்றவர்கள் 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி / என்ஏசி  (NTC/ NAC) பெற்றவர்கள் 11 மற்றும் 12ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டதை தொடர்ந்து, அரசு தேர்வுகள் இயக்ககத்தால் ஆகஸ்ட் 2022- ல் நடத்தபெற்ற மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Story image

இதையும் படிக்க.. மோடியால் தங்கிக் கொள்ள முடியுமா? சுப்ரமணியன் சுவாமி டிவீட்

விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதனை பின்பற்றி விண்ணப்பதாரரின் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ 28.02.2023 தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.