ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குறித்த கேள்விக்கு நாளை மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை தொடங்கியது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுக வேட்பாளர் குறித்த கேள்விக்கு நாளை மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் இடைத்தேர்தலில் அதிமுக வெல்வது உறுதி எனவும் கூறியுள்ளார்.