சிவகங்கை: பள்ளி வேன் கவிழ்ந்ததில் மாணவர் பலி!
சிவகங்கையில் தனியார் பள்ளியின் வேன் கவிழ்ந்ததில் ஒரு மாணவர் பலியானார். மேலும், 20 பேர் காயமடைந்துள்ளனர்.


சிவகங்கை: சிவகங்கையில் தனியார் பள்ளியின் வேன் கவிழ்ந்ததில் ஒரு மாணவர் பலியானார். மேலும், 20 பேர் காயமடைந்துள்ளனர்.
பெரிய கோட்டையில் உள்ள தனியார் பள்ளியின் வேன் வழக்கம் போல் மாணவர்களை இன்று காலை பள்ளிக்கு ஏற்றிச் சென்றது.
இந்நிலையில், சருகனேந்தல் என்ற பகுதியில் வேன் வந்தபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில், 7-ஆம் வகுப்பு படிக்கும் ஹரி வேலன் என்ற மாணவர் உயிரிழந்தார்.
மேலும், விபத்தில் சிக்கிய மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...