
: மெட்ரோ ரயில் நிலையங்களில் வங்கி கிரெடிட், டெபிட் அட்டைகள் மூலம் பயணம் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்தப்படுத்த மெட்ரோ நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
டிக்கெட் கவுன்டா்களில் காத்து நின்று டிக்கெட் பெற்று பயணிப்பதற்கு பதிலாக, பயணிகள் தங்கள் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் அட்டையை காண்பித்து பயணம் செய்யும் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் நுழைவு வாயிலில் கிரெடிட், டெபிட் அட்டையை காண்பித்தால் உள்ளே செல்ல தானாகவே அனுமதி கிடைக்கும். இதற்கான பயணக் கட்டணம் வங்கி கணக்கில் இருந்து எடுத்து கொள்ளப்படும். கைப்பேசியில் இது குறித்த விவரங்கள் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.