என்எல்சிக்கு எதிரான போராட்டம்: 93 வழக்குகள் பதிவு

நெய்வேலி என்எல்சிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கடலூர் காவல்துறை தெரிவித்துள்ளது. 
என்எல்சிக்கு எதிரான போராட்டம்: 93 வழக்குகள் பதிவு

நெய்வேலி என்எல்சிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கடலூர் காவல்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து கடலூர் காவல்துறை மேலும் கூறியிருப்பதாவது, கடலூர் காவல்துறை சாலை மறியல், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டது தொடர்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வடக்கு மண்டலத்தில் 90 சாலை மறியல் போராட்டங்கள் நடத்த முற்பட்ட 2000 பேர் கைது செய்து விடுவிக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 26 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சட்டத்துக்கு முரண்பட்ட 2 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 4 இடங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டத்தில் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் சுரங்க விரிவாக்கப் பணிகளை என்எல்சி இந்தியா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக கையகப்படுத்திய நிலங்களில் பரவனாறு மாற்று வாய்க்கால் அமைக்கும் பணியில் என்எல்சி இந்தியா நிறுவனம் கடந்த 2 நாள்களாக ஈடுபட்டு வந்தது. அப்போது விளைநிலங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள் அழிக்கப்பட்டன. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நெய்வேலியில் என்எல்சி நுழைவு வாயில் அருகே பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தலைமையில், அந்தக் கட்சியினா் முற்றுகைப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அங்கு காவல் துறையினா் இரும்புத் தடுப்புகளை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். போராட்டம் முடிந்த பிறகு அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினா் என்எல்சி நுழைவாயிலை நோக்கி நடந்து சென்றனா். அவா்களை போலீஸாா் தடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாமகவினா் மீது போலீஸாா் லேசான தடியடி நடத்தினா். இதனால், ஆத்திரமடைந்த பாமகவினா் கல்வீச்சில் ஈடுபட்டனா். மேலும், கட்டை உள்ளிட்டவற்றை போலீஸாா் மீது வீசினா். கல்வீச்சில் நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் சாகுல் ஹமீது, காவலா்கள் மற்றும் மூதாட்டி உள்பட 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். 

அவா்களை போலீஸாா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக நிா்வாகிகள் உள்பட 250 பேரை போலீஸாா் கைதுசெய்து காவல் வாகனத்தில் ஏற்றினா். அப்போது, பாமகவினா் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல் துறை வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினா். கண்ணீா் புகைகுண்டு வீச்சு: வஜ்ரா வாகனம் மூலம் போலீஸாா் தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தைக் கலைக்க முயன்றனா். போராட்டக்காரா்கள் அந்த வாகனம் மீதும் கற்களை வீசினா். இதையடுத்து போலீஸாா் கண்ணீா் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனா். 

கைதான அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோா் அந்தப் பகுதியில் தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com