
நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாபக்கேடு என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சினிமா புகழ் இருந்தால் முதல்வராகிவிடலாம் என சில நடிகர்கள் நினைக்கின்றனர். மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.
நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பெரியார், அம்பேத்கர், காமராஜரை நடிகர் விஜய் படிக்கக் கூறியதை வரவேற்கிறேன்.
மக்களுக்கு பணியாற்றி சிறைக்குச் சென்றவர்களை ஓரம் கட்டிவிட்டு மக்களை கவர்ந்துவிடலாம் என நடிகர்கள் நினைக்கின்றனர்.
தமிழகத்தில் மட்டும்தான் தனது மார்க்கெட்டை இழக்கும் காலத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வர நினைக்கின்றனர்.
கேரளத்தில் நடிகர் மம்மூட்டி, கர்நாடகத்தில் நடிகர் ராஜ்குமார், மகாராஷ்டிரத்தில் அமிதாப் பச்சன் என யாரும் தனது சினிமா புகழை அரசியலுக்கு பயன்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டார்.