மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போட்டியின்றித் தேர்வாகிறாரா இபிஎஸ்? மார்ச் 10ல் அதிமுக தலைமை நிர்வாகிகள் குழு கூட்டம்

வருகிற மார்ச் 10 ஆம் தேதி அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது

News image
கோப்புப்படம்
Updated On :6 மார்ச் 2023, 10:18 am

DIN

வருகிற மார்ச் 10 ஆம் தேதி அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 

இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வாக உள்ளதாகக் கூறப்படுகிறது. 

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாட்டினால் கட்சியினர் இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளனர். எனினும் மூத்த நிர்வாகிகள் பலரும் பழனிசாமிக்கு ஆதரவளிப்பதாக கூறப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அதிமுகவில் வருகிற மார்ச் 9 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 10 ஆம் தேதி அதிமுக தலைமை நிர்வாகிகள் குழு ஆலோசனை நடத்தவுள்ளது.

இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஆக்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.