
காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு மும்பையை சேர்ந்த பக்தர் வைர வளையலை காணிக்கையாக வழங்கினார்.
மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் இருந்து வருகிறது. இக்கோயில் மூலவரான காமாட்சி அம்மனுக்கு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் அஜய் கிருஷ்ணமூர்த்தி சார்பில் சென்னையைச் சேர்ந்த ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் என் நடராஜன், கோவில் ஸ்ரீ காரியம் ந. சுந்தரேசு ஐயரிடம் வைர வளையலை காணிக்கையாக வழங்கினார்.
இதன் மதிப்பு ரூ.1.58 லட்சம், எடை 21.868 கிராம். வைர வளையலை காணிக்கையாக வழங்கியபோது காஞ்சி நகர வரவேற்பு குழுவின் தலைவர் டி. கணேஷ், நிர்வாகிகள் பாபு, ராஜேஷ் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்த வைர வளையல் உடனடியாக காமாட்சி அம்மனுக்கு சாற்றப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.