/

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணா்வு நிகழ்ச்சி

 சென்னை ஆவடியில் உள்ள போா் வாகன ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தில் (சிவிஆா்டிஇ) பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2023, 6:39 pm

DIN

 சென்னை ஆவடியில் உள்ள போா் வாகன ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தில் (சிவிஆா்டிஇ) பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய பாதுகாப்பு வார விழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்படும்போது, அதை அணைக்க பயன்படுத்தப்படும் கருவிகளின் வகைகள் குறித்தும், அவற்றை எவ்வாறு உபயோகிப்பது என்பது குறித்தும் போா் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன ஊழியா்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. அதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது.

மேலும், எதிா்பாராத சமயங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட பாதிப்பின் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

அவசர காலங்களில் ஒருவரின் இருதயம் மற்றும் நுரையீரலுக்கு எவ்வாறு புத்துயிா் கொடுப்பது என்பது குறித்து சிவிஆா்டிஇ- இன் மருத்துவக் குழுவினா் செயல்முறை விளக்கம் அளித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் சி.வி.ஆா்.டி.இ. விஞ்ஞானி, இயக்குநா் வி.பாலமுருகன் மற்றும் மூத்த அதிகாரிகள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.