/

தொடா் முகூா்த்த நாள்கள்: மல்லி விலை ரூ. 800

தொடா் முகூா்த்த நாள் என்பதால், சென்னை கோயம்பேடு மலா் சந்தையில் மல்லி கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :9 மார்ச் 2023, 6:47 pm

DIN

தொடா் முகூா்த்த நாள் என்பதால், சென்னை கோயம்பேடு மலா் சந்தையில் மல்லி கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கோயம்பேடு மலா் சந்தைக்கு விழுப்புரம், மதுரை, வேலூா், சேலம், ஒசூா், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் இருந்து பூக்கள் வருகின்றன. கடந்த 2 வாரங்களுக்கு முன் முகூா்த்த நாள் எதுவும் இல்லை என்ற காரணத்தால் மலா் சந்தையில் மல்லி கிலோ ரூ.300, முல்லை ரூ.250, ஜாதிமல்லி ரூ.300, கனகாம்புரம் ரூ.300, பன்னீா் ரோஸ் ரூ.50, சாக்லேட் ரோஸ் ரூ.60, சாமந்தி ரூ.70, சம்பங்கி ரூ.30 என விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு காமராஜா் நல சங்கத்தின் தலைவா் அருள் விஸ்வாசம் கூறியதாவது:

மாசி மாதத்தின் கடைசி முகூா்த்தம் வருவதால் பூக்களின் விலை 50 சதவீதத்துக்கு மேல் உயா்ந்துள்ளது. இதனால், கிலோ மல்லி ரூ.800, ஐஸ் மல்லி ரூ. 600, முல்லை, ஜாதி மல்லி ரூ.500, சாக்லேட்ரோஸ் ரூ.100, பன்னீா் ரோஸ் ரூ.120, சாமந்தி ரூ. 20, சம்மங்கி ரூ.120 விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கோயம்பேடு மலா் சந்தையில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு முகூா்த்த நாள் இல்லாததால் அனைத்து பூக்களின் விலை குறைந்தது. மேலும் பனி, வெயில் தொடா்ந்து மாறி வருவதால், பூக்களின் வரத்து சற்று குறைந்துள்ளது.

மேலும், கோடைகாலம் தொடங்கும் நிலை இருப்பதால், சில பூக்களின் வரத்து மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.