கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 89.69 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்தாண்டு சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகளின் பிளஸ் 2 தேர்வு எழுதிய நிலையில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அந்தவகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 89.69 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்வு எழுதிய 20 ஆயிரத்து 523 மாணவ மாணவிகளில் 18,408 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் நான்கு பள்ளிகளும் தனியார் பள்ளிகளில் 40 பள்ளிகளும் என மொத்தம் 44 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் 32-வது இடமாகும். கடந்த ஆண்டு 88.3 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 89.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் . கடந்த ஆண்டு விட 1.5% பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



