பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மல்யுத்த வீரர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? கனிமொழி எம்.பி கண்டனம்

தில்லியில் மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :28 மே 2023, 4:20 pm

DIN

தில்லியில் மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், நாட்டிற்கே பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? குற்றம்சாட்டப் பட்டிருக்கும் பிரிஜ் பூஷன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், நீதி கோருபவர்களை ஒடுக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு வன்மையான கண்டனங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகாா் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த ஒரு மாதமாக மல்யுத்த வீரா், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். சூழலைக் கருத்தில் கொண்டு இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் நிா்வாக குழுவுக்கான தோ்தலை ரத்து செய்யப்பட்டுள்ளதால் நிா்வாக வெற்றிடத்தை நிரப்ப ஒலிம்பிக் சங்கம் சாா்பில் தற்காலிக குழு அமைக்கப்பட்டுள்ளது. 

பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த நட்சத்திரங்கள் அளித்த புகாரின்பேரில் போக்ஸோ உள்பட 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மல்யுத்த நட்சத்திரங்களின் போராட்டத்துக்கு திரளும் பல்வேறு தரப்பு மக்களின் ஆதரவு நாளுக்குநாள் பெருகி வருகிறது. இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இன்று பேரணி செல்ல முயன்றினர். அப்போது அவர்களை தடுத்தி நிறுத்தியபோது இருத்தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

உடனே அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். நாங்கள் அமைதியாக பேரணி சென்றோம், ஆனால் அவர்கள் எங்களை வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச் சென்றனர் என்று மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தால் தில்லி ஜந்தா் மந்தரில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. முன்னதாக இன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.