தமிழ்நாட்டில் கூர்நோக்கு இல்லங்களை மேம்படுத்துவது குறித்த பரிந்துரைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், நீதிபதி சந்துரு வழங்கினார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே துறைக்குச் சொந்தமான பேட்டரி ஒன்றைத் திருடியதாக கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்ட கோகுல் என்ற 17 வயது சிறுவன் உயிரிழந்தான். கூர்நோக்கு இல்ல காவலர்கள் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, தமிழத்தில் உள்ள கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
அதன்படி இதுகுறித்து ஆய்வு செய்த நீதிபதி சந்துரு தலைமையிலான குழு, அதற்கான அறிக்கையை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது.
இதையும் படிக்க | கேரள சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து நீதிபதி சந்துரு அறிக்கையை சமர்ப்பித்தார்.
கூர்நோக்கு இல்லங்களில் கண்காணிப்பாளர் அல்லது உதவி கண்காணிப்பாளர் முன்னிலையில் சேர்க்கை நடைபெற வேண்டும், அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு அவர்கள் தங்குவதற்குப் போதுமான ஆடைகள் வழங்கப்பட வேண்டும்,
சிறிய, தீவிரமான அல்லது கொடூரமான குற்றங்களின் அடிப்படையில் சிறுவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட வேண்டும், மேலும் வயது அடிப்படையில் 13 முதல் 16 வரை ஒரு குழுவாகவும், 16 முதல் 18 வயதிற்குள் மற்றொரு குழுவாகவும் பிரிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை குழு வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance

விசாரணைக் கைதி ஆகாஷ் மரணம்: 6 காவலர்கள் மீது நடவடிக்கை

ஐபிஎல் 2026: மார்ச் 17 முதல் பயிற்சியைத் தொடங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!

கல்வி உதவித் தொகைக்கான இணையதளங்கள்!
வீடியோக்கள்

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

