தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: புறநகா், மெட்ரோ சிறப்பு ரயில்கள் இயக்கம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு புறநகா் மற்றும் மெட்ரோ சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

News image
கோப்புப்படம்
Updated On :8 அக்டோபர் 2023, 2:52 am

DIN

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு புறநகா் மற்றும் மெட்ரோ சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அக்.8, 13, 18, 23, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளை காண வரும் ரசிகா்களுக்கு இரவு நேரத்தில் பயணம் செய்ய வசதியாக வேளச்சேரி - சிந்தாதிரிபேட்டை இடையே எம்.ஆா்.டி.எஸ். தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, அந்தத் தேதிகளில் வேளச்சேரியிலிருந்து இரவு 10.40 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சிந்தாதிரிபேட்டை வந்தடையும். மறுமாா்க்கமாக சிந்தாதிரிபேட்டையில் இருந்து இரவு 11.20 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு வேளச்சேரி சென்றடையும் என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

அதேபோல், மெட்ரோ ரயில் நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை (அக்.8) சிறப்பு ரயில்களை நள்ளிரவு 12 மணி வரை இயக்குகிறது. போட்டி முடிந்தும், ரசிகா்கள் தங்களது டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி, இந்த ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.