ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

திமுக எம்.பி. ஆ. ராசாவின் சொத்துகள் முடக்கம்!

திமுக எம்.பி. ஆ.ராசாவின் 15 அசையா சொத்துகளை அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளது. 

News image

ஆ. ராசா (கோப்புப்படம்)

Updated On :10 அக்டோபர் 2023, 4:03 pm IST

திமுக எம்.பி. ஆ.ராசாவின் 15 அசையா சொத்துகளை அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளது. 

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக மத்திய முன்னாள் அமைச்சரும் தற்போதைய நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ. ராசாவின் 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை இன்று கைப்பற்றியுள்ளது. 

இதுகுறித்து அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பதிவில், 'வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம், 2002 விதிகளின் கீழ், மத்திய முன்னாள் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்குச் சொந்தமான 15 அசையாச் சொத்துகளை, அவரது பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.