கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வேண்டும்: சீமான் பேச்சு

எதிர்காலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிப்போம் என சீமான் உறுதி அளித்துள்ளார்

News image
Updated On :14 அக்டோபர் 2023, 11:31 am

DIN

மற்ற படங்களுக்கு வராத நெருக்கடி ஏன் விஜய் நடித்துள்ள லியோ படத்திற்கு மட்டும் வருகிறது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: “லியோ’ படத்தை வைத்து அரசியல் செய்யவில்லை என்று சொல்வதே ஒரு அரசியல்தான். மற்ற படங்களுக்கு எல்லாம் தரப்படாத நெருக்கடி ஏன் விஜய் நடித்துள்ள படத்திற்கு மட்டும் தரப்படுகிறது. காவலர்கள் பாதுகாப்பு எல்லாம் தேவை இல்லாத வேலை. இதேபோல ஏன் ஜெயிலர் படத்திற்கு செய்யவில்லை.

தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு விஜயை தொந்தரவு செய்வது வெளிப்படையாக தெரிகிறது. இதற்கு முன்பு வெளியான விஜய் படங்களுக்கு கூட இவ்வளவு நெருக்கடி இல்லை. அதுதான் சந்தேகத்தை எழுப்புகிறது.

சினிமா வியாபாரம் பெருகிவிட்ட நிலையில் சிறப்புக் காட்சிகள் இருந்தால்தான் லாபம் கிடைக்கும். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதியளிப்போம்” என்று தெரிவித்தார். 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகும் இப்படத்தை திரையிடும்போது, பார்வையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடங்கள், போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தக் கூடாது மற்றும் அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக் கூடாது என சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்திருந்தது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.