தஞ்சாவூர்: தஞ்சாவூா் பெரியகோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1038 ஆம் ஆண்டு சதய விழாவையொட்டி தேவாரம் திருமுறை பாடி பெருவுடையாருக்கு 48 வகையான பேரபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தஞ்சை ஆண்ட மாமன்னன் ராசராச சோழனின் பிறந்த தினமான ஐப்பசி மாதம் சதய தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு இவ்விழா அரசு விழாவாக தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலில் சிறப்பாக நடைபெறுகிறது.
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் இரண்டு நாட்கள் நாட்டியம், கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம், திருவீதி உலா என வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருமுறை தேவாரப் பாடல்கள் பாடி தமிழ் முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருமுறை வீதி உலா தஞ்சை மாநகர 4 ராஜவிதியில் நடைபெற்று, தஞ்சை பெரிய கோயில் வளாகத்திற்குள் திருவீதி உலா வந்து அடைத்தது.
பின்னர் ராசராச சோழன் உலோகமாதேவி ஐம்பொன் சிலைகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பெருவுடையார், பெரியநாயகிக்கு திருமுறை தேவாரப் பாடல்கள் பாடி பால், மஞ்சள், சந்தனம், திருநீறு, தேன், அரிசிமாவு, திரவிய பொடி, நெய், தயிர், பன்னீர், எழுமிச்சை பழச்சாறு, பஞ்சாமிர்தம், வில்வம் உள்ளிட்ட 48 வகையான திரவியங்களால் பேராபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



