அரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

News image
கோப்புப்படம்
Updated On :4 செப்டம்பர் 2023, 7:47 am

DIN

ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி இன்று விடுத்துள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த, C. ஜான்கென்னடி(ஆயிரம்விளக்கு வடக்கு பகுதிக் கழக மாவட்டப் பிரதிநிதி) B. சுதாகர் பிரசாத் ( 111 கிழக்கு வட்டக் கழகச் செயலாளர், ஆயிரம்விளக்கு வடக்கு பகுதி) ஆகியோர், இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். 

கட்சி உறுப்பினர்கள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் பிரபல ரௌடி ஆற்காடு சுரேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜான்கென்னடி மற்றும் சுதாகர் பிரகாஷ் ஆகியோர் கைதான நிலையில், இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.