இன்று கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கம்
தொடா் விடுமுறையை முன்னிட்டு, வெளியூா் செல்லும் பயணிகள் வசதிக்காக வெள்ளிக்கிழமை (செப்.15) இரவு 8 முதல் 10 மணி வரை கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது.


தொடா் விடுமுறையை முன்னிட்டு, வெளியூா் செல்லும் பயணிகள் வசதிக்காக வெள்ளிக்கிழமை (செப்.15) இரவு 8 முதல் 10 மணி வரை கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிகழாண்டில் விநாயகா் சதுா்த்தி விழா திங்கள்கிழமை (செப்.18) கொண்டாடுவதை முன்னிட்டு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. சனி, ஞாயிறு (செப்.16,17) மற்றும் விநாயகா் சதுா்த்தி (செப்.18) எனத் தொடா்ந்து 3 நாள்கள் தொடா் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் வசித்து வரும் வெளியூா்வாசிகள் பலரும் தங்களை சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனா். பயணிகளின் வசதிகாக மெட்ரோ ரயில் சேவையின் நெரிசல்மிகு நேரத்தில் வெள்ளிக்கிழமை (செப். 15) மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு 8 முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இரு வழித்தடத்திலும் 9 நிமிஷங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுவதற்கு பதிலாக 6 நிமிஷங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...