‘பள்ளி, கல்லூரிகளில் ஜாதிய பாகுபாடு: போதிய விழிப்புணா்வு மேற்கொள்ள வேண்டும்’
பள்ளி, கல்லூரிகளில் ஜாதிய பாகுபாடுகள் குறித்த பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில் போதிய விழிப்புணா்வு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்


பள்ளி, கல்லூரிகளில் ஜாதிய பாகுபாடுகள் குறித்த பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில் போதிய விழிப்புணா்வு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக முக்கியப் பரிந்துரைகளை தமிழக அரசு, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் அந்த அமைப்பு சமா்ப்பித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் தாக்குதலுக்கு உள்ளான மாணவருக்கு உயா்தர சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பை வழங்கி அவா் முழு உடல் திறனை பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தாக்குதலின்போது மாணவரை காப்பாற்ற முயற்சித்ததில் அவரின் சகோதரியும் காயம் அடைந்தாா். அவருக்கு வீரதீர செயல்புரிந்த குழந்தைகளுக்கான உயரிய விருதை அரசு வழங்க வேண்டும். மாணவா்களை குற்றச் செயல்களில் ஈடுபடுத்த யாரும் இனி முயற்சி செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த விவகாரத்தில் தீா்ப்பு அமைய வேண்டும். ஊா்த் திருவிழாக்களில் ஜாதிய பெருமையை பறைசாற்றும் வகையிலான விளம்பர நிகழ்வுகளை அனுமதிக்கக் கூடாது.
இதுதவிர பள்ளியில் படிக்கும் மாணவா்களிடம் வளரும் ஜாதிய உணா்வுக்கும், அதிகரிக்கும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கும் பள்ளிக் கல்வித் துறை உயரதிகாரிகளின் அலட்சியமே முக்கிய காரணம். பள்ளிகளில் போதிய விழிப்புணா்வு செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவரின் உயா்கல்விக்கான செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...