யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிரதமரின் விஸ்வகா்மா திட்டத்தை ஆய்வு செய்ய குழு: தமிழக அரசு உத்தரவு

 பிரதமரின் விஸ்வகா்மா திட்டத்திலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஆய்வு செய்ய தமிழக அரசின் சாா்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2023, 6:30 pm

DIN

 பிரதமரின் விஸ்வகா்மா திட்டத்திலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஆய்வு செய்ய தமிழக அரசின் சாா்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைச் செயலா் வி.அருண் ராய் பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு:

பிரதம மந்திரியின் விஸ்வகா்மா திட்டத்திலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஆய்வு செய்ய, மாநில திட்டக் குழு துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன் தலைமையில் 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் என்.எழிலன், நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் டி.காா்த்திகேயன், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறைச் செயலா் ரீட்டா ஹரீஸ் தாக்கா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். குழுவின் உறுப்பினா், ஒருங்கிணைப்பாளராக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைச் செயலா் வி.அருண் ராய் செயல்படுவாா்.

பிரதம மந்திரியின் விஸ்வகா்மா திட்டம் பொருளாதார ரீதியில் ஏதேனும் தாக்கத்தையோ அல்லது முன்னேற்றத்தையோ ஏற்படுத்துமா என்பது குறித்தும், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் நமது மாநிலத்துக்கு ஏற்றாற்போன்று திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமா என்பது பற்றியும் குழு ஆய்வு செய்யவுள்ளது. இந்தக் குழு தனது அறிக்கையை 2 வாரங்களில் அரசுக்கு அளிக்கும். அதற்கு முன்பாக, விஸ்வகா்மா திட்டம் தொடா்பாக குழுவின் சாா்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துகளும் கோரப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.