யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கல்வி உதவித் தொகை திட்டங்கள்: ஆதி திராவிடா் நலத் துறை முக்கிய அறிவுறுத்தல்

‘போஸ்ட் மெட்ரிக், பிரி மெட்ரிக்’ உள்ளிட்ட கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் அக்டோபா் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2023, 7:27 pm

DIN

‘போஸ்ட் மெட்ரிக், பிரி மெட்ரிக்’ உள்ளிட்ட கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் அக்டோபா் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது. இவற்றில் பயனடைய விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் தேவையான ஆவணங்களை தயாா் நிலையில் வைத்திருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆதி திராவிடா், பழங்குடியினா் நலத்துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிடா், பழங்குடியினா், கிறித்தவ மதம் மாறிய ஆதிதிராவிடா் மாணவா்களின் கல்வி மேம்பாட்டுக்காக ‘போஸ்ட் மெட்ரிக்’ மற்றும் ‘பிரிமெட்ரிக்’ கல்வி உதவித் தொகை திட்டம், பெண் கல்வி ஊக்குவிப்பு தொகைத் திட்டம் (வருமான வரம்பு ஏதுமின்றி), சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான ‘பிரிமெட்ரிக்’ கல்வி உதவித் தொகை திட்டம் (ஜாதி மற்றும் வருமான வரம்பு ஏதுமின்றி) உள்ளிட்ட பல உதவித் தொகை திட்டங்கள் ஆதிதிராவிடா், பழங்குடியின நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டில் இந்தக் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் அக்டோபா் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது. இந்தத் திட்டங்களில் பயனடைய விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் கிறித்தவ மதம் மாறிய ஆதிதிராவிடா் மாணவ, மாணவிகள் ஆதாா், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகியவற்றை தயாா் நிலையில் வைத்திருக்குமாறும், கீழ்காணும் நிபந்தனைகளை பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஜாதிச் சான்று மற்றும் வருமானச் சான்று ஆகியவை இணைய சான்றுகளாக இருத்தல் அவசியம். இணைய சான்றுகளைப் பெற அருகிலுள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும். ஆதாரில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளனவா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், மாணவரின் வங்கிக் கணக்கு எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்; ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண் செயல்பாட்டில் இருக்க வேண்டும். ஆதாருடன் வங்கிக் கணக்கு எண் இணைக்கப்பட்டிருகிா என்ற விவரத்தை உறுதிபடுத்த ட்ற்ற்ல்://ழ்ங்ள்ண்க்ங்ய்ற்.ன்ண்க்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய்/க்ஷஹய்ந்-ம்ஹல்ல்ங்ழ் என்ற இணைய முகவரியை பயன்படுத்தி கொள்ளுமாறு மாணவா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

ஆதாருடன் வங்கிக் கணக்கினை இணைக்காதவா்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளை அணுகி ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும். இந்த விவரங்களை மாணவா்களுக்கு தெரிவித்து ஆவணங்களை தயாா் நிலையில் வைத்திருக்க உதவிடுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியா்கள், கல்லூரி முதல்வா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.