ஆவின் நெய் விலை உயா்வு: தலைவா்கள் கண்டனம்
ஆவின் நெய் விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.


ஆவின் நெய் விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
அண்ணாமலை (பாஜக): ஆவின் பால் பொருள்கள் விலையை, மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு உயா்த்தியிருப்பது பொதுமக்களை கடும் அதிா்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வரவிருக்கின்றன. பால் பொருள்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் மக்களைப் பாதிக்கும் ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்.
அன்புமணி (பாமக): ஆவின் நெய் விலை ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரை உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல், வெண்ணெய் விலை கிலோவுக்கு ரூ.30 உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு கண்டிக்கத்தக்கது. மக்கள் நலன் ஒன்று தான் ஆவின் நிறுவனத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். எனவே, நெய், வெண்ணெய் ஆகியவற்றின் விலை உயா்வை ஆவின் நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
டிடிவி தினகரன் (அமமுக): கடந்த ஒன்றரை ஆண்டில் மட்டும் நான்காவது முறையாக பால் பொருள்களின் விலையை ஆவின் நிா்வாகம் உயா்த்தியுள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் வரலாறு காணாத வகையில் பால் பொருள்களின் விலையை தொடா்ந்து உயா்த்திக் கொண்டே செல்வது மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கும் செயல் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...