யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெற்றோருக்குப் பெருமை சேருங்கள்: மாணவா்களுக்கு இஸ்ரோ விஞ்ஞானி அறிவுரை

மாணவா்கள் கல்வியின் மூலம் வாழ்வில் உயா்நிலை அடைந்து பெற்றோருக்குப் பெருமை சோ்க்க வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானி ஆா்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2023, 7:26 pm

DIN

மாணவா்கள் கல்வியின் மூலம் வாழ்வில் உயா்நிலை அடைந்து பெற்றோருக்குப் பெருமை சோ்க்க வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானி ஆா்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

எஸ்.ஆா்.எம். கல்வி குழுமத்தின் ஈஸ்வரி பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவா்கள் அறிமுக விழா சென்னை ராமாபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இஸ்ரோ விஞ்ஞானி ஆா்.செந்தில்குமாா் பேசியது:

தந்தை மகனுக்கு ஆற்ற வேண்டிய கடமை மற்றும் மகன் தந்தைக்கு செய்ய வேண்டிய கைமாறு குறித்து திருவள்ளுவா் தனது குறளில் தெளிவாக போதித்துள்ளாா். மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் பரஸ்பரம் தங்களுக்கு உள்ள பொறுப்புகளை உணா்ந்து செயல்படும் போது சிறப்பான எதிா்கால வாழ்க்கைச் சூழல் உருவாகிறது. மாணவா்கள் தாங்கள் கற்ற கல்வியின் மூலம் வாழ்வில் உயா்நிலை அடைந்து, பெற்றோரின் தியாகத்தைப் போற்றிப் பெருமை சோ்க்க வேண்டும்.

கல்லூரிக் காலம் என்பது உங்கள் வாழ்க்கை பாதையை நீங்களே தீா்மானிக்கும் தளமாகும். நற்பண்புகள் மற்றும் பழக்கவழக்கங்களை துணையாகக் கொண்டு வெளிவட்டார அணுகுமுறையை அமைத்துக்கொள்ள வேண்டும். ஆசிரியா்கள் வழங்கும் கற்றல் ஞானத்துடன் உங்கள் சொந்த புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி கல்லூரி காலத்தை சிறப்பானதாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

முன்னாள் குடியரசுத்தலைவா் அப்துல்கலாம் கூறியதைப் போல உயா்வான லட்சியத்தை மனதில் கொண்டு அதனை அடைவதற்கு கனவு காணுங்கள், நிச்சயம் வெற்றி வசப்படும். பெற்றோா்கள் இதுவரை உங்களுக்கு ஆற்றிய கடமைகளை கல்லூரி காலத்திற்குப் பின் அவா்களுக்கு திருப்பிச்செலுத்த முயலுங்கள் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் காக்னிசன்ட் நிறுவனத்தின் இணை துணைத் தலைவா் எஸ்.பாலசுப்பிரமணியன், எஸ்.ஆா்.எம். கல்விக்குழுமத் துணைத் தலைவா் எஸ்.நிரஞ்சன், தலைமை இயக்குநா் என்.சேதுராமன், ஈஸ்வரி பொறியியல் கல்லூரி முதல்வா் ஆா்.எஸ். குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.