யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விமானத்தில் கடத்திவரப்பட்ட அரியவகை பாம்புக்குட்டிகள், அணில் பறிமுதல்

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரியவகை 15 பாம்புக்குட்டிகள், அணிலை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2023, 7:24 pm

DIN

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரியவகை 15 பாம்புக்குட்டிகள், அணிலை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு வியாழக்கிழமை அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதிலிருந்து வந்த சென்னையைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் 2 பெரிய பிளாஸ்டிக் கூடைகள் எடுத்து வந்தாா். சந்தேகமடைந்த சுங்கத் துறை அதிகாரிகள் அந்தக் கூடையை சோதனை செய்தனா். அப்போது அதில், அரிய வகை 15 மலைப்பாம்புக் குட்டிகள், ஆப்பிரிக்கா அணில் ஆகியவை உயிருடன் இருப்பது தெரியவந்தது.

அவரிடம் எந்த ஆவணங்களும் இல்லாததால், அரியவகை உயிரினங்களை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், அவரைக் கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட உயிரினங்களை மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்பவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். அதன்படி, வெள்ளிக்கிழமை (செப்.15) அதிகாலை, சென்னையில் இருந்து, தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்லும் விமானத்தில் அந்த உயிரினங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதற்கான விமான செலவுகள் அனைத்தையும் கடத்தி வந்த இளைஞரிடமே வசூலிக்கவும் முடிவு செய்துள்ளதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.