விராலிமலை: விராலிமலை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளிருந்த ரூ.4, 83,390 பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டி- தென்னலூர் சாலையில் 6647 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது. வழக்கம்போல வியாபாரத்தை முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு ஊழியர்கள் வியாபாரமான தொகையை கடைக்கு உள்ளே இருக்கும் லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

கொள்ளை சம்பவம் நடைபெற்ற டாஸ்மாக் கடையில்போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | விராலிமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, பணம் கொள்ளை
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை அப்பகுதி வழியாக சென்ற சிலர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே லாக்கர் உடைக்கப்பட்டு உள்ளிருந்த ரூ.4, 83,390 கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
தொகுதி நலனுக்காக தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம்

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



