ராம்ராஜ் காட்டனின் புதிய திருமண வேஷ்டி அறிமுகம்

பருத்தி, பட்டு, லினின் துணிகளில் சட்டைகள் மற்றும் வேஷ்டிகளைத் தயாரித்து வரும் முன்னணி நிறுவனமான ராம்ராஜ் காட்டன், ரூ.1 லட்சம் விலையில் புதிய திருமண வேஷ்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
Updated on
1 min read

பருத்தி, பட்டு, லினின் துணிகளில் சட்டைகள் மற்றும் வேஷ்டிகளைத் தயாரித்து வரும் முன்னணி நிறுவனமான ராம்ராஜ் காட்டன், ரூ.1 லட்சம் விலையில் புதிய திருமண வேஷ்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மிகவும் விலை உயா்ந்த, பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தைப் பறைசாற்றும் புதிய வேட்டி ரகத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சுத்தமான தங்கத்தின் மிகச் சிறந்த நூல்களைப் பயன்படுத்தி ஆடம்பரம் மற்றும் நோ்த்தியை வெளிப்படுத்தும் வகையில் இந்த வேஷ்டிகள் கவனமாக கைகளால் நெய்யப்படுகின்றன.

ரூ.1 லட்சம் விலையிடப்பட்டுள்ள இந்த வேஷ்டியை, அண்மையில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மதுரை ராஜ்மஹால் சில்க்ஸ் ரெடிமேட் உரிமையாளா் முருகானந்த் அறிமுகப்படுத்தி வைத்தாா்.

ராம்ராஜ் காட்டனின் விற்பனையாளா்கள் மற்றும் விநியோகஸ்தா்களுக்கான அந்தக் கூட்டத்தில் நிறுவனத்தின் தலைவா் கே.ஆா். நாகராஜன் கலந்துகொண்டு பேசினாா் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில் பெண்கள் மட்டும்தான் பட்டுப் புடவைகளை அணிந்து வருவது வழக்கமாக இருந்தது. அதனை மாற்றும் வகையில் ஆண்களுக்கும் திருமண பட்டு வேஷ்டிகள் மற்றும் பட்டுச் சட்டைகளை அறிமுகப்படுத்திய ராம்ராஜ் காட்டன், விலையுயா்ந்த பிரிவிலும் பெண்களுடன் போட்டி போடும் வகையில் இந்த புதிய 1 லட்சம் ரூபாய் திருமண வேஷ்டிகளை தற்போது அறிகப்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com